• Dec 26 2024

அந்த ஐந்து பேரையும் தன் கணவர்களாக நினைத்து தான் ஆடை இல்லாமல் நடித்தார்! அமலா பால் பற்றிய டாப் சீக்ரெட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நீலத்தாமரா என்னும் மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் அமலாபால்.தமிழில் மைனா என்னும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார். இப்படத்தைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தன.

மேலும் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் அண்மையில் தனது நண்பர் ஒருவரை இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.


இந்த நிலையில், பத்திரிகையாளர் செய்யாறு பாலு நடிகை அமலா பால் குறித்து பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். 

அதன்படி அவர் கூறுகையில், 'அமலா பால் முதலில் நடித்த படம் வீரசேகரன். அந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. நானும் அப்போது ஏவிஎம் சென்றிருந்தேன். அப்போது ஹீரோயின் இன்னும் வரவில்லை. கேரளாவிலிருந்து வருகிறார் என்று சொல்லியிருந்தார்கள்.

அனைவரும் ஹீரோயினுக்காக காத்திருந்தார்கள். ஏவிஎம்மில் ஒரு ஆட்டொ ஆடி அசைந்து வந்து நின்றது. முதலில் அமலா பாலின் அம்மா இறங்கியதும் மலையாளம் கலந்த தமிழில், ஏங்க கேரளாவிலிருந்து ஒரு பஸ்ஸை புக் பண்ணீங்க. அவங்க 14 மணி நேரம் ஓட்டுனாங்க; சரி அது இருக்கட்டும் கோயம்பேடிலிருந்து இங்கே வர ஒரு காரைக்கூடவா அனுப்பக்கூடாது என்று கத்தினார். அமலா பால் அமைதியாக நின்றிருந்தார். அவரது கண்கள் அனைவரையும் கவர்ந்தது. அப்போதே அங்கிருந்தவர்கள் இந்தப் பெண் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்று கணித்தனர்.


அவர்கள் நினைத்தபடியே அமலா பால் பெரிய ரவுண்டு வந்தார். பல கதைகளில் அவர் துணிச்சலாக நடித்தார். அப்படி அவர் நடித்த படம்தான் ஆடை. அதில் ஆடையே இல்லாமல் சில காட்சிகளில் நடித்தார். அந்தக் காட்சி எடுத்தபோது இயக்குநர் ரத்னகுமார் உள்ளிட்ட ஐந்து பேர்தான் ஸ்பாட்டில் இருந்தார்கள். அப்போது அந்த ஐந்து பேரையும் என்னுடைய கணவர்களாக மனதளவில் நினைத்துக்கொண்டுதான் ஆடையில்லாமல் நடித்தேன் என்று அவர் சொல்லியதாகவும் ஒரு தகவல் உண்டு. அந்த அளவுக்கு துணிச்சல்மிக்க பெண் அவர்' என்றார். 

Advertisement

Advertisement