• Dec 26 2024

ஆம்பள ஷோக்கு கேட்குதா? ஷிவாங்கியின் திருமண அறிவிப்புக்கு எல்லை மீறிய கமெண்ட்ஸ்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!


சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கி தனது சமூக வலைத்தளத்தில் திருமணம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ள நிலையில் ஆம்பள ஷோக்கு கேட்குதா?  என்பது உள்பட சில எல்லை மீறிய கமெண்ட்ஸ் பதிவாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்  டைட்டில் பட்டதை நூலிழையில் மிஸ் செய்தார் என்பதும் அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்று சீசன்களில் கோமாளியாகவும் நான்காவது சீசனில் குக்காகவும் கலந்து கொண்டார் என்பது தெரிந்தது.

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ உள்பட ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும், தற்போதும் அவர் சில படங்களில் நடித்தும் பாடல்கள் பாடியும் வருகிறார்.



இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி அவ்வப்போது சில பதிவுகளை செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் ’சமூக வலைதளத்தை பார்த்தால் திருமணம் ஆகிவிட்டது என்றும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்றும் சிலர் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவு செய்து வருகின்றனர். இதையெல்லாம் பார்த்தால் நானும் அந்த நிலையில் தான் இருக்கிறேன் என்று தோன்றுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து உங்களுக்கு பாய் பிரண்டு இருக்கிறாரா? ஆம்பள ஷோக்கு கேட்குதா? என்பது உள்பட சில மோசமான கமெண்ட்ஸ்கள் பதிவானாலும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகுங்கள். போன்ற பாசிடிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது.

Advertisement

Advertisement