• Dec 27 2024

என்னைய பார்த்தா கேணச்சி மாதிரி தெரியுதாடி உனக்கு? ரோகிணியை கண்டபடி திட்டிய விஜயா

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைய  நாளுக்கான ப்ரோமோ  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

ஏற்கனவே, ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் இடம்பெற்ற நிலையில், அடுத்து ரோகிணிக்கு தாலி பிரித்து கோர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

இன்னொரு பக்கம் பின்னால் இருந்த முத்துவை காணவில்லை என அண்ணாமலை பதற்றப்படுகிறார்.


இந்த நிலையில், மேடையில் இருந்த ரோகினியிடம்  சென்ற விஜயா, என்ன ரோகிணி உங்க அப்பாவ இன்னும் காணவில்லை என சொல்ல, அதற்கு அப்பாவுக்கு கால் பண்ணினான் போகல என ரோகிணி சொல்கிறார்.

அதற்கு விஜயா என்ன பார்த்தா கேணச்சி மாதிரி இருக்குதா உனக்கு, நீ சொல்ற கதைகளை நம்பிட்டு இருக்க, அப்பா வர மாட்டார் என்றா வர மாட்டார் என்று சொல்லலாம் தானே. எல்லாரும் சேர்ந்து என்னைய ஏமாத்திட்டு இருக்கீங்க என ரோகிணிக்கு கண்டபடி கிழிக்கிறார். இதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.

Advertisement

Advertisement