• May 23 2026

விஜய் எப்பவுமே அப்பாவோட கண்ட்ரோலில தான்.! 6 மணிக்கு மேல இதை தான் செய்வார்.. ஷோபா

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி. முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்கு இன்னும் மூன்று எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுவதாக கூறப்படும் நிலையில், விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இதனால், அடுத்த ஐந்து ஆண்டுகள் விஜய்யின் ஆட்சி தமிழகத்தில் அமையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், விஜய்யின் புகைப்படங்களுடன் பேரணிகள் நடத்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்தப் பேட்டியில், “விஜய் சிறு வயதிலிருந்தே அவரது அப்பாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவர்.

காலை நேரம் 9 தொடக்கம் 6 வரை மட்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார். மிகவும் அவசியமான சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே இரவு ஷூட்டிங்கிற்கு செல்வார். நைட் ஷூட்டிங் இருந்தால் பகலில் வீட்டிலேயே ஓய்வெடுப்பார்.” என்று கூறியிருந்தார். இந்த பேட்டி தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement