• Oct 05 2025

கணவர் போய்ட்டா பொண்ணுங்க முடங்கிடணுமா? இன்னொரு பெரியார் வர வேண்டுமா? சின்மயி அதிரடி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  தனது தனித்துவமான குரலால் பாடகியாகவும் நாயகிகளுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்தவர் சின்மயி. இவருக்கு மீட் டு விவகாரங்கள் பெரிய அழுத்தத்தை கொடுத்தன.

பிரபல பாடல் ஆசிரியர் தன்னிடம் பாலியல் அத்துமிரலில் ஈடுபட்டார் என சின்மயி தெரிவித்த விடயம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.  அதன் பின்பு பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களும்  தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை பொது வெளியில் பகிரத் தொடங்கினர். 

அதே நேரத்தில்  மீட் டு விவகாரத்தினால்  சின்மயிக்கு திரைத்துறையில் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டது.  இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக இசை நிகழ்ச்சிகளை தவிர்த்தார். தமிழ் படங்களில் பாடல்களையும் பாடுவதில்லை. 

இதை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற தக் லைப் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல்  மீண்டும் அவருக்கு கம்பேக் கொடுத்தது.  அவரின் அற்புதமான குரலை பார்த்த பலரின் பாராட்டுக்களும் அவருக்கான தடைகளை உடைத்தது.  


இந்த நிலையில்,  பாடகி சின்மயி தற்போது  தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கணவன் இறந்த பிறகு பெண்கள் அலங்கோலமாக்கப்படுகின்றனர். 2025 ஆம் ஆண்டிலும் இந்த நடைமுறை மாறவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

மேலும் நாம பிறக்கும்போதே  நமக்கு நகை போடுறாங்க.. பொட்டு வைக்கிறாங்க.. வளையல் போடுறாங்க.. பொண்ணு என்று எல்லாம் பண்ணுறாங்க ஆனால் கல்யாணம் ஆன பிறகு  அவை அத்தனைக்கும் சொந்தக்காரன் கணவன் தான்..  அந்த கணவன் கிளம்பிட்டா இந்த கலர் எல்லாம் அழிந்து விடனும்.. என்ற மனநிலையில் தான் இப்பவும் பலர் இருக்காங்க.  

ஆனா இந்த 2025 ஆம் ஆண்டுல  இருக்குற  சின்னவங்க சரி  பெரியவங்களுக்கு அட்வைஸ் பண்ணுங்க.. ஏற்கனவே அவங்க கணவனை இழந்த தவிப்புல இருப்பாங்க.. அந்த நேரத்துல  அவங்களுடைய கோலத்தை  அழிப்பது நியாயம் இல்லை.. இதையெல்லாம் பற்றி பேச இன்னொரு  பெரியார் போன்ற ஆண்கள் தான் வர வேண்டுமா?  என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது  இவருடைய கருத்துக்கு ஆதரவாக  பலர் திரண்டு உள்ளனர். 

Advertisement

Advertisement