• Dec 26 2024

இதெல்லாத்தையும் உங்க கல்யாண மண்டபத்தில வைக்கக் கூடாதா?-ரஜினிகாந்தை மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

stella / 11 months ago

Advertisement

Listen News!

தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக இன்றைய தினம் தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். வீடுகளில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி, கரும்பு, பழங்கள், புது பானையில் பொங்கலிட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் தனது வீட்டு முன் திரளும் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார். அந்த வகையில், தைத்திங்கள் முதல் நாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை போயஸ் கார்டன் பகுதியில் இருக்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு ரசிகர்கள் அவரைக் காணக்கூடியிருந்தனர். 


அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன்பு கையசைத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.இந்த நிலையில், தான் ரஜினிகாந்த் வீட்டின் பக்கத்து வீட்டார், தலைவா இறைவான்னு வருவாங்க….எங்களை மாதிரி இங்கு இருக்கும் 21 வீட்டுக்காரங்களும் கஷ்டப்படுற மாதிரி ஒருத்தரும் கஷ்டப்பட மாட்டாங்க. 

உங்க கேட்ட திறந்து உள்ளே விடுங்க. உங்க கேட்டு திறக்க கூடாது. எங்க வாசல் மூடி இப்படியே இருக்கணும். உங்க கேட்டை திறந்து எல்லோரையும் உள்ளே விடுங்கள் என்று ரஜினிகாந்த் வீட்டின் செக்யூரிட்டிகார்டிடம் அந்த பெண்மணி இவ்வாறு கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த நிலையில் இது குறித்து ப்ளூ சட்டை மாறனும் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார்.அதில் " ரசிகர்களை தனது கல்யாண மண்டபத்தினுள் அல்லது வேறேதேனும் தனிப்பட்ட இடத்தில் சந்திக்காமல் இப்படி சுற்றி உள்ள வீட்டாரை தொந்தரவு செய்வது ரஜினிக்கு சரியா?" என பதிவிட்டுள்ளார்.இதனால் ரஜினி ரசிகர்கள் அவருக்கு எதிராக தம்முடைய கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement