• Dec 25 2024

ரஜினி மகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்.. தொடர்கிறதா லோகேஷ் கனகராஜ் கெமிஸ்ட்ரி?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான ‘இனிமேல்’ என்ற ஆல்பம் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியதாக கூறப்படும் நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் இதனை அடுத்து லோகேஷ் -ஸ்ருதிஹாசன்  கெமிஸ்ட்ரி தொடர்வதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை அவர் தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் மகளாக நடிக்கும் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் அவரை தேர்வு செய்ததற்கு ஸ்ருதிஹாசன்  உடன் சமீபத்தில் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி தான் காரணம் என்று கூறப்படுகிறது.



ஏற்கனவே லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் லிவிங் டு கெதரில் இருப்பதாகவும் இருவரது குடும்பத்திலும் புயலை ஏற்படுத்தி இருப்பதாகவும் வதந்திகள் பரவி வரும் நிலையில் ’தலைவர் 171’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அதற்கு முழு காரணம் கெமிஸ்ட்ரி ஆக தான் இருக்கும் என்று தற்போது ஒரு புதிய வதந்தி பரவி வருகிறது.

ஆனால் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து விசாரித்த போது ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக பரவி வரும் செய்தி முழுக்க முழுக்க பொய்யானது என்றும் அவரை இந்த படத்தில் இணைப்பது குறித்து இப்போது வரை எந்த ஐடியாவும் இல்லை என்றும் கூறியுள்ளனர். இருப்பினும் லோகேஷ் - ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி குறித்த செய்தி இணையத்தில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement