• Dec 25 2024

பாலித்தீவுக்கு அடுத்தடுத்து செல்லும் ‘எதிர்நீச்சல்’ நடிகைகள்.. அடுத்தது யார்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்த மதுமிதா, பாலித்தீவு  சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்த நிலையில் தற்போது அதே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஹரிப்பிரியா இசை பாலித்தீவு  சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ’எதிர்நீச்சல்’ என்பதும் டிஆர்பியில் முன்னணி இடத்தில் உள்ள இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் மதுமிதா நடிக்க கனிகா, ஹரிப்பிரியா இசை ,பிரியதர்ஷினி உள்ளிட்டோர்களும் நடித்து வருகின்றனர் என்பதும் வேல மூர்த்தி உள்ளிட்ட நடிகர்களும் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா சமீபத்தில் பாலித்தீவு சென்ற நிலையில் அவர் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து உடனே அதே தீவுக்கு செல்ல வேண்டும் என்ற முடிவெடுத்த ஹரிப்பிரியாவும் தற்போது அங்கு சென்றுள்ளார். அங்கிருந்து கொண்டே அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் மதுமிதா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா உள்ளிட்டோர் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்ட நிலையில் அடுத்தடுத்து மாறி மாறி படப்பிடிப்புகள் இருப்பதால் நால்வரும் சேர்ந்து பாலித்தீவு செல்ல முடியாததால் தனித்தனியாக சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கனிகா, பிரியதர்ஷினி பாலித்தீவு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement