• Dec 27 2024

நான் தமிழ் பொண்ணுங்க... ஆணித்தரமாக நிரூபித்த ஸ்ருதி ஹாசன்! விபரம் உள்ளே..!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமான ஸ்ருதி ஹாசன், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா தாக்கூர் ஆகியோருக்குப் பிறந்தார். இவரது சினிமா பயணமானது  குழந்தை நட்சத்திரமாக ஆரம்பமானது. 2009  ஆம் ஆண்டு வெளியான லக் என்ற ஹிந்தித் திரைப்படத்தின் மூலம் வயது முதிர்ந்த பெண்ணாக இவர் அறிமுகமானார் . 

தெலுங்கு , இந்தி மற்றும் தமிழ் படங்களில் பணிபுரியும் இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான 7ஆம் அறிவு திரைப்படம் மூலம் அறிமுகமானார். அத்துடன் அந்த ஆண்டிற்கான சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும்  வென்றார். தொடர்ந்தும் தமிழில் விஷால், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.மேலும் கடந்தாண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற சலார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.


இந்நிலையில், அண்மையில் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் பெரும்  வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. வெள்ளை நிற பட்டு புடவையில் மின்னும் நகைகளுடனும் ஸ்ருதி ஹாசன் ஜொலிக்கிறார் என்றே சொல்லலாம். இளைஞர்கள் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது இவரின் பதிவு.


Advertisement

Advertisement