• Dec 26 2024

மூஞ்சியப்பாரு!நாயே! சொறுகிடுவேன் என்பதெல்லாம் எதிர்காலத்தில் நல்லதில்லை- நிக்சனை வன்மையாகக் கண்டித்த பிரபல நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த 7வது சீசன் தான் படுமோசமான சீசன் என கடும் விமர்சனங்களை ரசிகர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் விமர்சகர்களும் வைத்து வருகின்றனர். பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய நிலையில், கமல்ஹாசன் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும் கடுமையான ட்ரோல்களும் குவிந்தன.

மேலும் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மழை காரணமாக எவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் நிக்சனுக்கு அர்ச்சனாவுக்கும் இடையே பயங்கர சண்டை வெடித்துள்ளது.


அதன்படி அர்ச்சனாவிடம் பேசும் போது நீ எல்லாம் பொண்ணாடி,கருமம், சொறுகிடுவேன் போன்ற வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தி இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே நிக்சன் சரியான வாய் சொல் வீரர் என்றும் வாள் வீச மாட்டார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எப்போதாவது கருத்து தெரிவித்து வரும் நடிகை ஸ்ரீபிரியா தற்போது நிக்சன் பேசியது தவறு என அட்வைஸ் செய்து ட்வீட் போட்டுள்ளார். ”நிக்சன் தம்பி…மூஞ்சியப்பாரு!நாயே! சொறுகிடுவேன்!!! இவ்வார்த்தைகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்புடையதல்ல… எதிரில் இருப்பவர் என்ன பேசியிருந்தாலும்…தீதும் நன்றும் பிறர்தர வாரா…” என ட்வீட் போட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement