• Dec 26 2024

சிக்கினான் சிவனாண்டி... ராஷ்மிகாவின் போலி ஆபாச வீடியோ விவகாரம்... பீகார் தம்பி கைது...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் ரஷ்மிகா இருப்பது போலவே ஆபாசமாக வீடியோ பதிவாகி இருந்தது. ஆனால் அந்த வீடியோவில் நடிகை ரஷ்மிகா இல்லை, வேறு ஒரு பெண்ணின் விடியோவை வைத்து ராஷ்மிகா போன்று தொழிநுற்பரீதியாக முகம் மாற்றி அந்த ஆபாச விடியோவை வெளிட்டுள்ளனர்.    


இந்த விவகாரம் தொடர்பாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து, ராஷ்மிகாவிற்கு ஆதரவு வழங்கி வந்தனர்.இந்நிலையில் 19 வயது பீகார் வாலிபர் சிக்கியுள்ளார். டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் இதுகுறித்து டெல்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது இந்த வீடியோவை அந்த வாலிபர், தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பின்னர் மற்ற தளங்களில் பகிர்ந்துள்ளார். 


அவரது கணக்கில் இருந்து பதிவேற்றப்பட்டதால் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் படி போலி செய்ததற்கான தண்டனை மற்றும் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் நடவடிக்கையின் கீழ் கடந்த 10ம் தேதி டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு எப்ஐஆர் பதிவு செய்தது. 


இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இன்ஸ்டாகிராமில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ததாக கூறினாலும் பீகாரை சேர்ந்த அந்த வாலிபரிடம் விசாரித்து வருகிறோம். அந்த வாலிபர், காவல் துறையின் சிறப்பு பிரிவு முன் ஆஜரானார். அவர் பதிவேற்ற பயன்படுத்தியதாக கூறப்படும் அவரது கைப்பேசியை கொண்டு வரும்படி கேட்டு கொள்ளப்பட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement