• Dec 26 2024

சிலம்பரசனுக்கு கல்யாணம்... ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா... அட இவரையா திருமணம் செய்ய போகிறார்?

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு 40 வயதாகும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். நடிகை நயன்தாரா, த்ரிஷா ,ஹன்சிகா என அடுத்து அடுத்து காதல் கதைகள் தான் ஆனால் எதும் நிரந்தரமாக நிலைக்கவில்லை.  


அவ்வப்போது நடிகர் சிம்பு பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் பல வதந்திகள் வெளிவரும். இந்நிலையில், தற்போது நடிகர் சிம்பு, பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரை திருமணம் செய்ய போவதாக தகவல் கிடைத்துள்ளது.


சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். சிம்புவுடன் இணைந்து போடா போடி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக வரலக்ஷ்மி நடித்திருந்தார். அதுவே அவருடைய முதல் திரைப்படமாகும்.


இந்த நிலையில், ரீல் ஜோடியாக திரையில் வந்த சிம்பு - வரலக்ஷ்மி இருவரும், நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடியாக போகிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால், இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் அவர்கள் தரப்பில் இருந்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement