• Dec 27 2024

நேற்று வெளியான வீடியோ ‘STR 48' படம் கிடையாதா? ரசிகர்கள் ஏமாற்றம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு நேற்று தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ அவர் நடிக்க இருக்கும் ‘STR 48' படத்தின் சம்பந்தப்பட்ட வீடியோ என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நேற்று வெளியான வீடியோ அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் பாகுபலி படத்திற்கு இணையான காட்சிகள் இருந்தது என்று சிம்பு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘STR 48' படத்தின் காட்சிகள் தான் இவை என்றும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.



ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி இந்த வீடியோ அவர் நடித்த விளம்பர படத்தின் வீடியோ என்றும் கிரீன்மேட்டில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில் கிராபிக்ஸ் காட்சிகளை இணைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த விளம்பரம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் கதம் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 இந்த வீடியோ ‘STR 48' படத்தின் காட்சிகள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு காட்சி விளம்பர படமா என்பது எங்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியதாகவும் ஆனால் அதே நேரத்தில் ‘STR 48' பட வீடியோவும் சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் சிம்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement