• Dec 27 2024

முதல்முறையாக திருநங்கை கேரக்டர்.. வேற லெவலில் சிம்புவின் அடுத்த படம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


நடிகர் சிம்பு முதன் முறையாக அடுத்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் 48 வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒன்றில் நாயகன், ஒன்றில் வில்லன் என்று கூறப்பட்டது.



இந்த நிலையில் தற்போது சிம்புவின் வில்லன் கேரக்டர் திருநங்கை என்றும் முதல் முறையாக திருநங்கை கேரக்டரில் நடிப்பதற்கு பாடி லாங்குவேஜ் உள்பட பல்வேறு பயிற்சிகள் தற்போது அவர் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சரத்குமார், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சிலர் மட்டுமே திருநங்கை வேடத்தில் நடிக்க துணிந்த நிலையில் மாஸ் நடிகர் ஒருவர் திருநங்கை வேடத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த ஆண்டுக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement