• Dec 27 2024

கோலிவுட்டில் பிரியாணி கலாச்சாரம்.. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷை அடுத்து சிம்பு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பிரியாணி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது என்றும் முன்பெல்லாம் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தால் கேக் வெட்டி கொண்டாடுவதையே வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் தற்போது படப்பிடிப்பு முடியும் தினத்தில் அந்த படத்தின் ஹீரோ அல்லது இயக்குனர் படக்குழுவினர்களுக்கு பிரியாணி விருந்து வைக்கின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தான் நடித்து வந்த ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நாளில் பிரியாணி விருந்து வைத்தார் என்பதும் அவரே அனைவருக்கும் பரிமாறினார் என்பதையும் பார்த்தோம். அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் பிரியாணி பார்ட்டி வைத்த நிலையில் தற்போது சிம்புவும் பிரியாணி பார்ட்டி வைத்துள்ளார்.

சிம்பு தற்போது கமல்ஹாசனின் ’தக்லைஃப்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவரது நடிப்பை நேரில் முதல் முதலாக பார்த்த கமல்ஹாசன் ஆச்சரியம் அடைந்து இந்த படத்தில் சிம்புவின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை மாற்றுங்கள் என்று மணிரத்னம் அவர்களிடம் சொன்னதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

இந்த நிலையில் நேற்று இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து  பிறந்த நாளை அடுத்து அவருக்கும் தனது நண்பர்களுக்கும் நடிகர் சிம்பு பிரியாணி அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனை அஸ்வத் தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார். இந்த பிரியாணி பார்ட்டியில் ‘தக்லைஃப்’ படத்தில் பணிபுரியும் சிலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து தான் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் ’டிராகன்’ என்ற படத்தை இயக்க இருக்கும் நிலையில் அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சிம்புவிடம் அவர் கேட்டிருப்பதாகவும் கண்டிப்பாக நடித்து தருகிறேன் என்று சிம்புவும் கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement