• Apr 27 2026

இனிமேல் அதை பத்தி வாயை திறக்கவே கூடாது.. டி ராஜேந்தரை வறுத்தெடுத்த சிம்பு..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களுக்கு முன் டி ராஜேந்தர் உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றார் என்பதும் குறிப்பாக அமெரிக்காவில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் முழு குணமாகி வீடு திரும்பினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் டி ராஜேந்தர் தற்போது முழு உடல் நலமாக இருக்கும் நிலையில் அவரை தேடி சில வாய்ப்புகள் வருவதாகவும் இதில் சில வாய்ப்புகளை அவர் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக ஒரு பாடல் பாடி கொடுக்க வேண்டும் என்று டி ராஜேந்தரிடம் சில இயக்குனர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் பாடுவதற்கு அவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. அது மட்டும் இன்றி ஒரு படத்தை தயாரித்து இயக்க டி ராஜேந்தர் திட்டமிட்டிருந்த நிலையில் சிம்பு அதனை கேள்விப்பட்டு  டி ராஜேந்தரை வறுத்து எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இப்போது நீங்கள் பாடி தான் ஆக வேண்டும், படம் இயக்க வேண்டும் என்று யார் கூறினார்கள்? நீங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும், எந்த படத்திலும் ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று சிம்பு கண்டிஷனாக சொல்லிவிட்டதாகவும், இதனை அடுத்து மறுபேச்சின்றி டி ராஜேந்தர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சிறப்பு தோற்றத்தில் எந்த விதமான ரிஸ்க்கும் இல்லாமல் சில காட்சிகளில் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டும் பார்க்கலாம் என்று சிம்பு கூறியிருப்பதை அடுத்து டி ராஜேந்தரிடம் அது குறித்து சில இயக்குனர்கள் அணுகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிம்புவுக்கு டி ராஜேந்தர் குடும்பத்தினர் மணப்பெண் பார்த்து விட்டதாகவும் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement