• Dec 26 2024

வில்லியாக மாறிய குழலி.. எதிர்த்த வீட்டில் ஏழரையை கூட்டிய பாண்டியன்.. இனிமேல் ஆட்டம் ஆரம்பம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் நிச்சயதார்த்தத்துக்கு செல்வதற்காக பாண்டியன் குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர். வீட்டின் வாசலில் பிரம்மாண்டமாக கோலம் போட வேண்டும் என்று மீனா மற்றும் ராஜி பேசிக்கொண்டிருக்கும் நிலையில் இருவரும் சேர்ந்து கஷ்டப்பட்டு கோலம் போடுகின்றனர்.

அப்போது வீட்டுக்கு வரும் குழலி ’இதெல்லாம் ஒரு கோலமா? என்று கூறி தண்ணீரை ஊற்றி அழித்து விடுகிறார். ’என் தம்பி நிச்சயதார்த்த தினத்திற்கு நான் போடுகிறேன் பாரு கோலம்’ என்று அவர் கூற ’என்ன இப்படி .செய்து விட்டீர்கள், நாங்கள் முக்கால் மணி நேரமாக கஷ்டப்பட்டு கோலம் போட்டோம்’ என்று மீனா மற்றும் ராஜி வருத்தப்படுகின்றனர். ’இந்த வீட்டில் மாமியார் நல்லவர் என்று நினைத்தால் ஆனால் அதற்கு பதிலாக நாத்தனார் கொடுமை இருக்கிறது’ என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.



இதனை அடுத்து நிச்சயதார்த்தத்துக்கு செல்லும் போது நகை இல்லை என்று ராஜி வருத்தப்பட மீனா சில நகைகளை கொடுக்கிறார், எல்லாமே கவரிங் தான் என்றும் ஆனாலும் பரவாயில்லை இருக்கட்டும் என்று மீனா கூறுகிறார். ஆனால் அந்த நகையை பார்த்ததும் குழலி கேலி செய்கிறார். அனைவரும் முன்னிலையிலும் தங்களை ஓடி வந்து திருமணம் செய்தவர்கள் என்று அவமானப்படுத்தும் குயிலின் மீது மீனா மற்றும் ராஜி வெறுப்படைய, கோமதி தனது மகள் குயிலியை கண்டிக்கிறார்.

இதனை அடுத்து ஒரு வழியாக எல்லோரும் கிளம்பி வாசலுக்கு வர கார் தயாராக இருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் குடும்பத்தின் எதிர்த்த வீட்டில் உள்ள பாட்டி எல்லோரும் நல்ல காரியத்துக்கு செல்வதை அறிந்து ஆசீர்வதிக்கும்  நிலையில் அந்த வீட்டின் மருமகள்கள் வந்து பார்க்கின்றனர்.

அப்போது அவர்களை பார்க்கும் பாண்டியன் ஏழரை கூட்டும் வகையில் பேசுகிறார். ’சரவணனுக்கு திருமணமே நடக்காது சாபம் விட்டார்களே, இப்போது பார் நான் எப்பேர்ப்பட்ட சம்பந்தத்தை செய்து வருகிறேன்’ என்று கூற குழலி தவிர பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதைக் கேட்டு எதிர்த்த வீட்டில் உள்ளவர்களும் ஆத்திரம் அடைய இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம் என்பது போல் தெரிகிறது.

Advertisement

Advertisement