• Apr 27 2026

சூர்யாவை பெண்ட் நிமிர்த்த காத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ்.. செம்ம ஹோம்வொர்க்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தற்போது ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்திற்காக அவர் ஏகப்பட்ட பயிற்சிகள் செய்துள்ளார் என்பதும் குறிப்பாக குதிரை பயிற்சிக்கு அவர் பல மாதங்கள் செலவு செய்தார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த படம் தனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டு பல பயிற்சிகள் செய்த சூர்யாவுக்கு அடுத்த படம் இதைவிட ரிஸ்க்காக இருக்கும் என்று தெரிகிறது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்திற்காக சூர்யாவை பல பயிற்சிகள் செய்ய சொல்லி கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாகவும் இந்த படத்தின் வெயிட்டான கேரக்டருக்கு சூர்யா தயாராக வேண்டும் என்று அவரை பெண்ட் நிமிர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்காக சில விசேஷ பயிற்சிகளை கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருக்கும் நிலையில் அதற்காக சூர்யா மும்பையில் ஹோம்வொர்க் செய்து வருவதாக கூறப்படுகிறது. சூர்யா தனது கேரக்டருக்கு தயாராகி விட்டாரா என்பதை உறுதிசெய்த பின்னரே கார்த்திக் சுப்புராஜ் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியை கார்த்திக் சுப்புராஜ் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா ஜோடியாக ஸ்ருதிஹாசன் ’ஏழாம் அறிவு’ என்ற படத்தில் நடித்த நிலையில் மீண்டும் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement