• Apr 30 2026

தக் லைஃப் படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்த சிம்பு! வெளியான போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் தான் தக் லைஃப்.

இந்த படம் கேங்ஸ்டர் கதைகளத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமலஹாசன் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்து வருகின்றார். சமீபத்தில் சிம்புவின் கிளிம்ஸ் ஒன்றும் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில், நடிகர் சிம்பு தக் லைஃப் படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.


இந்தப் புகைப்படத்தில் சிம்பு திரும்பிய படி போஸ் கொடுத்திருந்தாலும் அவரது லுக் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. தக் லைஃப் படத்தை நிறைவு செய்துவிட்டு சிம்பு அடுத்ததாக தனது எஸ்டிஆர் 48வது படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement