நடிகர் சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான வெந்து தணிந்தது காடு, மாநாடு, பத்து தல போன்ற படங்கள் மாபெரும் ஹிட் அடித்தன. இதைத்தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்தார்.
இதற்கிடையில் இயக்குநனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதையும் சிம்புவுக்கு பிடித்து போக, விரைவில் முழு கதையை எழுதி வருமாறு தெரிவித்ததாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தக் லைஃப் படத்தில் நடிக்கும் நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் நடிகையுடன் நடன கலை அம்சத்துடன் சிம்பு எடுத்துக்கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாகி வருகின்றன.
தக் லைஃப் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சிம்பு மற்றும் த்ரிஷாவும் இணைந்துள்ளார். இந்த படம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவர உள்ளதால் இந்த படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
மேலும் தக் லைஃப் படத்தில் இருந்து வெளியான டீசரில் சிம்புவின் அதிரடி காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திருந்தது. எனவே இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!