இயற்கையாகவே சிறந்த குரல் வளத்தையும் பாடும் திறனையும் கொண்டவராக பாடகர் திருமூர்த்தி காணப்படுகின்றார். இவர் மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் பாடல்களை அப்படியே அடி பிசறாமல் பாடி பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
விசுவாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடியபோது, அதனை ஊரிலுள்ள இளைஞர்கள் இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கினர்.
இந்த வீடியோவை பார்த்த இசை அமைப்பாளர் டி. இமான் அவரை தொடர்பு கொண்டு, ஜீவா நடித்த சீறு படத்தில் இடம்பெற்ற செவ்வந்தி என்ற பாடலை பாடுவதற்கான வாய்ப்பை கொடுத்தார். இந்த பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
d_i_a
இவர் சிறுவயதிலிருந்தே கொட்டாங்குச்சி மூலம் இசையை வாசித்து பாட ஆரம்பித்துள்ளார். அதன் பின்பு வீட்டில் உள்ள பாத்திரங்கள், குடம் போன்ற பொருட்களினாலும் இசையை வாசித்து அதற்கு ஏற்ற போல பாடலை பாடியுள்ளார்.
மேலும் கொரோனா காலத்தில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோதும் சிகிச்சை மையத்தில் இருந்த சக நோயாளிகளை தனது பாட்டு திறமையினால் மனம் தராமல் வைத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது பாடகர் திருமூர்த்தி வழங்கிய பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகின்றது. அதில் மூன்று மாதத்திற்கு முன்னாடி நடந்த ஒரு விபத்தில் கை எலும்பு முறிந்து போய்விட்டதாகவும், அதற்கு டி. இமான் தான் செலவு செய்ததாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அதாவது, மூன்று மாதத்திற்கு முதல் விபத்து ஒன்றில் சிக்கிய திருமூர்த்தி 'ஐயோ இனி வாசிக்கவே முடியாமல் போய்விடுமோ..' என பயந்துள்ளார். அதன் பின்பு ஆபரேஷன் பண்ணி பிளேட் வச்சி இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த தகவல் இமானுக்கு தெரிந்ததும் அவர் ஆப்ரேஷன் செலவுக்கு பணம் அனுப்பி வைத்து தன்னை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.
Listen News!