• Dec 27 2024

ரோகிணி கூட கடைசி வரைக்கும் நீ சந்தோஷமா இருந்திருவ..? மனோஜ்க்கு அதிர்ச்சி கொடுத்த செல்வம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் தற்போது பிரபலமாகி விட்டார்கள் என்பதும் தெரிந்தது.

மேலும் இந்த சீரியலில் முத்து, மீனா, மனோஜ், ரோகிணி, ரவி, ஸ்ருதி ஆகிய கேரக்டர்களில் நடித்து வரும் நட்சத்திரங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்வார்கள் என்பதும் அந்த வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்றுமுன் மனோஜ் மற்றும் செல்வம் கேரக்டர்களில் நடித்து வரும் ஸ்ரீதேவா மற்றும் பழனியப்பன் ஆகிய இருவரும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர். அதில் ’ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்’ என்று செல்வம் கேட்க, அதற்கு மனோஜ் வழக்கம்போல் திருதிருவென விழிக்கிறார்.

அப்போது செல்வம் ’நீ ரோகிணியை கல்யாணம் பண்ணினாய் அல்லவா, அது ஆசை, ஆனால் ரோகிணியோடு கடைசி வரைக்கும் சந்தோசமா வாழனும்னு நினைக்கிறியே, அது பேராசை’ என்று கூற செல்வம் கூற, அவரை மனோஜ் முறைக்கும் காட்சி உள்ளது.

 இந்த வீடியோவுக்கு ஏராளமான கமண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும் மனோஜ் ரியாக்சன் சூப்பர் என்றும் சீரியல் இருக்கிற மாதிரியே அப்பாவியாக இருக்கிறார் என்றும் தெரிவித்தனர். மேலும் ’முத்து, மீனாவை வைத்து ஒரு வீடியோ போடுங்கள் செல்வம்’ என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement