• Dec 27 2024

கோமாவில் இருந்து எழுந்த ராதிகா.. நீதிமன்றத்தில் மயூ கொடுத்த ட்விஸ்ட்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், நீதிமன்றத்தில் ஈஸ்வரிக்கு எதிராக சாட்சியங்கள் எல்லாம் இருந்தபடியினால் ஈஸ்வரி குற்றவாளி என்று தீர்ப்பு வழங்குவது உறுதியாக, அங்கிருந்த ராமமூர்த்தி ஈஸ்வரி அப்படி பண்ணியிருக்க மாட்டார் என கத்தி குளறுகிறார். இதனால் நீதிபதி ராமமூர்த்தியை வெளியே அனுப்புமாறு போலிசாருக்கு உத்தரவிடுகிறார்.

அதன் பின்பு கமலாவும் ராதிகாவும் ராமமூர்த்தி கத்தவில்லை என்றால் ஈஸ்வரிக்கு என்ன தண்டனை கொடுத்திருப்பார்கள் என்று பார்த்திருக்கலாம் என பேசிக் கொண்டிருக்க, மறுப்பக்கம் செழியன், ராமமூர்த்தி, எழில் எல்லோரும் வெளியே நின்று அழுது கொண்டு இருக்கிறார்கள். அங்கு பாக்யா வந்து தீர்ப்பு வழங்கியாச்சா என்று கேட்க, நடந்தவற்றை சொல்கின்றார்கள்.

ஆனாலும் பாக்கியா அத்தைக்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் இன்றைக்கே வீட்ட கூட்டிப் போகலாம் என்று தைரியம் கொடுத்து உள்ளே அழைத்துச் செல்கிறார். அதன்பின்பு பாக்யா வக்கீலிடம் சென்று பேச, கமலா அவங்க ஏதோ ரகசியம் பேசுறாங்க என்ன என்று கேட்க வேண்டும் என எழுந்திருக்கவும் ராதிகா அவரை அடக்கி வைக்கின்றார்.


இதைத்தொடர்ந்து நீதிபதியிடம் பாக்கியாவின் வக்கீல் இறுதியாக ஒரு சாட்சியமட்டும் விசாரிக்க அனுமதி அளிக்குமாறு கேட்க, அவர் ஒப்புக்கொள்கிறார். இதன் போது மயூவின் பெயரைக் குறிப்பிட, ராதிகாவும் கமலாவும் பதட்டப்படுகிறார்கள்.

இதை அடுத்து பாக்கியா மயூவை அழைத்து வர, ராதிகா இடையில் தடுத்து அவ சின்ன பொண்ணு எப்படி சொல்லுவார் என்று கேட்க, நீதிபதி பேசாமல் இருக்குமாறும் இல்லையென்றால் வெளியே அனுப்பிடுவேன் என்று கட்டளையிடுகின்றார். அதன் பின்  நடந்த உண்மைகளை சொல்லுகிறார் மயூ. அப்போது ராதிகாவுக்கும் தான் பூவாஸ் தடுக்கி விழுந்தது ஞாபகம் வருகின்றது. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement