• Dec 27 2024

சிறகடிக்க ஆசை: மீனா காலில் விழுந்து வாசுதேவன் மன்னிப்பு கேட்கணும்.. அண்ணாமலை கண்டிஷனால் ஸ்ருதி அதிர்ச்சி?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

மீனா காலில் விழுந்து வாசுதேவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலை நிபந்தனை விதித்ததால் ஸ்ருதி அதிர்ச்சி அடைந்துள்ளதாக சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்த  எபிசோடுகளில் வரும் காட்சிகள் என்று கூறப்பட்டு வருகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில்  ஸ்ருதி மற்றும் ரோகிணி ஆகிய இருவருக்கும் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நிலையில் முத்துவை எப்படியாவது கோபப்பட வைக்க வேண்டும் என ரோகிணி ஒரு பக்கமும், ஸ்ருதி அம்மா ஒரு பக்கமும் திட்டமிட்டனர்.

ஆனால் இந்த இரண்டு திட்டமும் பலிக்காத நிலையில் தற்செயலாக மீனா மீது திருட்டு பட்டத்தை வாசுதேவன் சுமத்த அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் வாசுதேவனை முத்து அடித்து விடுகிறார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட அண்ணாமலை, ரவியிடம் ஸ்ருதியை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வா என்று கூற, ஸ்ருதி வர முடியாது என்று கூறுகிறார்.

இதுவரை மட்டும் தான் இன்றைய புரோமோவில் வெளியாகி உள்ள நிலையில் இதன்பின் காட்சிகள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதில் ஸ்ருதியிடம் அண்ணாமலை ’உன் அப்பா செய்தது மிகப்பெரிய தவறு, மன்னிக்க முடியாத தவறு, அவர் மீனாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நிபந்தனை விதிப்பதாகவும் அதை கேட்டு ஸ்ருதி அதிர்ச்சி அடைவதாகவும் காட்சிகள் வர இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் விஜயா மீனாவின் மேல் பழி சொல்வதாகவும் உன்னால் தான் இந்த விழா கெட்டுப் போய்விட்டது, ஸ்ருதி வீட்டுக்கு வர முடியாது என்று கூறுவது உன்னால் தான் என்று திட்டுவதாகவும் அப்போது முத்து மற்றும் அண்ணாமலை இருவரும் சேர்ந்து விஜய்யாவை கடிந்து கொள்வதாகவும் அடுத்தடுத்த எபிசோடுகளில் காட்சிகள் வரும் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை வரப்போகுது எபிசோடுகளில் இருந்து தெரிந்து கொள்வோம்.

Advertisement

Advertisement