• Dec 27 2024

உங்க அப்பா இங்க வரல்ல.. உனக்கு எந்த இடம்ன்னு நான் முடிவு பண்ணுவேன்.. ரோகிணிக்கு ஆப்பு வைத்த விஜயா

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் தினந்தோறும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் ஒரு திருப்புமுனை ஏற்படுவதால் பார்வையாளர்கள் இந்த சீரியலுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். 

முத்து - மீனா,  மனோஜ் - ரோகிணி,  ரவி - ஸ்ருதி மற்றும் அண்ணாமலை - விஜயா ஆகிய எட்டு கேரக்டர்களை வைத்து ஒரு சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்ல முடியும் என்றால் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் தான். இந்த நிலையில் ரோகிணி அடுக்கடுக்காக பொய்களை சொல்லி அண்ணாமலை குடும்பத்தில் மருமகளாக புகுந்துள்ள நிலையில் அவருடைய ஒவ்வொரு பொய்யாக வெளிப்பட்டு கொண்டிருக்கும் நேரம் வந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

மலேசியாவில் தன்னுடைய அப்பா இருப்பதாகவும் அவர் பெரிய கோடீஸ்வரர் என்றும் கூறிய ரோகிணி தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் அப்பா வருகிறார், வந்து கொண்டே இருக்கிறார், வந்து விட்டார் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் முத்து செய்த பிரச்சனை காரணமாக தற்காலிகமாக மலேசியா அப்பாவை மறந்து இருந்த விஜயா, தற்போது மீண்டும் ரோகிணியை கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கிவிட்டார். 

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ’நீ உண்மையை சொல்கிறாயா, பொய் சொல்கிறாயா என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்று கேட்க, நான் என்ன பொய் சொன்னேன் என்று எனக்கு ஒன்றுமே புரியலை என்று அப்பாவியாக ரோகிணி  சொல்கிறார். அதற்கு விஜயா நிஜமாகவே உனக்கு அப்பா இருக்கிறாரா? அல்லது உன் கற்பனையா? மலேசியா நாட்டுக்கே உங்க அப்பா என்ன அதிபதியா? என்று ஆத்திரமுடன் கேட்கிறார்.

அதற்கு ரோகிணி ’நான் எதற்காக உங்களிடம் சும்மா சொல்ல போறேன் என்று சொல்ல உண்மையைச் சொல், உன் அப்பா வருவாரா? வரமாட்டாரா? என்று கேட்க ’அவர் ஏன் வரவில்லை என்று இப்போ வரைக்கும் எனக்கு புரியவில்லை’ என்று அழுது கொண்டே கூறுகிறார்.

அதற்கு விஜயா ’உன்னுடைய கண்ணீரை பார்த்து நான் நம்பிக் கொண்டு இருக்க மாட்டேன், நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது, உன் அப்பா இங்கே வரவில்லை என்றால் அப்புறம் இந்த வீட்டில் உனக்கு எந்த இடம் இருக்கிறது என்று நான் முடிவு பண்ணுவேன்’ என்று கறாராக கூறுகிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது. 

மொத்தத்தில் ரோகிணி சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்க தொடங்கி விட்ட நிலையில் அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement