• Dec 27 2024

காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிவிட்டது: விஷ்ணு விஷால் பகிர்ந்த மேஜிக் புகைப்படம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

காலம் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிவிட்டது என்று நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ள மேஜிக் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவிற்கும் நடிகர் சூரிக்கும் இடையே நிலம் வாங்கி தருவதில் பிரச்சனை வந்தது என்பதும் இதனை அடுத்து விஷ்ணு விஷால் அப்பா மீது நடிகர் சூரி காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் நீதிமன்றத்திலும் இது குறித்து வழக்கு நடந்து வருவதாக கூறப்பட்டது. தனக்கு நிலம் வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் விஷ்ணு விஷாலின் தந்தை ஏமாற்றி விட்டதாக சூரி குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில் இது குறித்த செய்திகளும் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேட்டி அளித்த விஷ்ணு விஷால் சூரியிடம் சமரசமாக பேசி முடித்து விட்டதாகவும் இடையில் வேறு ஒருவர் புகுந்து விளையாடிவிட்டதால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் நாம் வாழ்க்கையை ஒரு குறுகிய காலகட்டத்தில் தான் வாழ்கிறோம், இதில் பகைமை எதற்கு, அதனால் சூரியுடன் நாங்கள் நட்புடன் பிரச்சனையை சுமூகமாக முடித்து விட்டோம் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் விஷ்ணு விஷாலின் அப்பாவுடன் நெருக்கமாக சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருக்கும் புகைப்படம் விஷ்ணு விஷாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவில், ‘எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லிவிட்டது, சூரி அண்ணாவுக்கும் நன்றி, ஐ லவ் யூ அப்பா’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து சூரிக்கும் விஷ்ணு விஷால் குடும்பத்திற்கும் இருந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.



Advertisement

Advertisement