• Dec 27 2024

ஒரு பன்னு, டீ இருந்தா போதும்.. ’சிறகடிக்க ஆசை’ மீனாவை கரெக்ட் பண்ணிடலாம்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு ரசிகர்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மீனா கேரக்டரில் நடித்து வரும் கோமதி பிரியாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் தினந்தோறும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கோமதி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தினமும் ரிலீஸ் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அவர் பதிவு செய்த வீடியோவுக்கு ஒரு பக்கம் ஆதரவும் இன்னொரு பக்கம் கேலியும் கிண்டலுமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. 

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதே சீரியல் மலையாளத்தில் ’செம்பன்னிர் பூவு’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இதிலும் கோமதி பிரியா தான் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழில் நடிக்கும் போது சக நடிகர் நடிகைகளுடன் ரீல்ஸ் போடும் கோமதி பிரியா மலையாளத்தில் நடிக்கும் போதும் அதே மாதிரி ரீல்ஸ்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் மலையாளத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் அருண் நாயர் என்பவருடன் சமீபத்தில் அவர் பதிவு செய்த வீடியோ அவருடைய இன்ஸ்டாகிராமில் உள்ளது.

அந்த வீடியோவில் கோமதியை பார்த்து, ‘இந்த நாய்க்கு ஒரு டீ, பன் வாங்கி கொடுத்தா போதும் நாள் முழுவதும் என் கூடவே இருப்பான்’ என்ற அருண் நாயர் கூற அதற்கு கோமதி பிரியா அவரை அடிக்கும் காட்சி உள்ளது. இந்த வீடியோவுக்கு கோமதிப்பிரியாவை கரெக்ட் செய்ய ஒரு டீ ஒரு பன் வாங்கி கொடுத்தால் போதும் போல தெரிகிறது என்று கிண்டலான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.



Advertisement

Advertisement