• Dec 26 2024

உங்களை மாமான்னு கூப்பிடலாமா மாமா? உண்மையாகவே தங்கமயிலுக்கு லவ் வந்துருச்சா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக பாண்டியன் - கோமதி தம்பதியின் மூத்த மகன் சரவணனுக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக தங்கமயில் வீட்டில் அவர்கள் பெண் பார்க்கும் போது நடக்கும் காமெடியான காட்சிகள் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பெண் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் மீனா தனது சந்தேகத்தை எழுப்புகிறார். பெண் வீட்டார்கள் ஓவர் நல்லவர்களாக இருக்கிறார்கள், எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது, எதற்கும் கொஞ்சம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று பாண்டியனிடம் அவர் தனது சந்தேகத்தை கூறுகிறார்.

ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்து விட்டு இதன் பிறகு விசாரிப்பதில் நன்றாக இருக்காது, கண்டிப்பாக அவர்கள் நல்லவர்களாக தான் இருப்பார்கள் என்று பாண்டியன் கூறுகிறார்.



இந்த நிலையில் தான் தங்கமயில் அம்மா மாப்பிள்ளைக்கு போன் போடு என்று அவரை கட்டாயப்படுத்த, தங்கமயிலும் வேறு வழியின்றி போன் போடுகிறார். போனில் இருவரும் பேசிக்கொள்ளும் காமெடி காட்சிகள் உள்ளன என்பதும் அதில் ஒன்று ’எங்க அம்மாவை உங்களுக்கு பிடிச்சு இருக்கா என்று தங்கமயில் கேட்க, அதற்கு அசடு வழிய சரவணன் இருக்கும் காட்சியும் உள்ளது.

அதன் பிறகு ’கட்டிக்க போறவரை மாமான்னு கூப்பிட வேண்டும் என்று எங்க அம்மா சொல்றாங்க, உங்களை மாமான்னு கூப்பிடலாமா மாமா’ என தங்கமயில்  சொல்ல இதை ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த பாண்டியன் குடும்பத்தினரும் இன்ப அதிர்ச்சி அடைகின்றனர்.

அதன் பிறகு போனை வைத்தவுடன் குடும்பத்தில் உள்ள எல்லோரும் சரவணனை கேலி செய்து ’மாமா மாமா’ என்ற பாடலை பாட பாடும் கலகலப்பான காட்சிகளும் இன்றைய எபிசோடில் உள்ளன. மொத்தத்தில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில் தங்கமயில் குடும்பத்தினரின் சுயரூபம் தெரிந்தால் தான் கதையில் திருப்பம் ஏற்படும், அது எப்போது தெரியும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement