• Dec 24 2024

சிவகார்த்திகேயன் படம் ஒத்திவைப்பால் பிரச்சனை..!கடன் நெருக்கடியில் படக்குழு

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள திரைப்படத்தினை இந்த மாதம் ஆரம்பிக்க தீர்மானித்து இருந்தனர் ஆனால் தற்போது குறித்த படத்தினை எடுக்க தாமதமாகியமையினால் பல பிரச்சினைகள் நிகழ்ந்துள்ளது.


அதாவது விசாரணைகளின் படி இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருந்ததாகவும் அவர் வேறு படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருவதால் அவரது நேர ஒதுக்கீடு இல்லாமையினால் படப்பிடிப்பு ஆரம்பிக்க தாமதமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் குறித்த படத்திற்கான ஒத்திவைப்பே படக்குழுவிற்கு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்னவெனில் பேஷன் ஸ்டூடியோவிடம் இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் 25 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் குறித்த கடனானது டிசம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என வேண்டப்பட்டதாகவும் தற்போது வேலைகளை பிற்போட்டுள்ளமையினால் கடன் கொடுத்தவர்கள் வட்டி தொகை அதிகம் வரும் எனவே எனது கடனை திருப்பி செலுத்தும்படி படக்குழுவிற்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement