• Dec 26 2024

சிவகார்த்திகேயனுக்கு வில்லனான பிரேமம் பட நாயகன்..! எந்த படத்தில் தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராக காணப்பட்ட இவர், தனது விடாமுயற்சியின் காரணமாக இன்று உலகமே வியந்து பார்க்கும் நடிகராக உருவெடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படம் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்ததோடு மட்டும் இல்லாமல் வாழ்ந்தே காட்டியுள்ளார்.

d_i_a

தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் தற்போது பத்து நாட்களின் முடிவில் 200 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முதலாக 200 கோடியை  வசூலித்துள்ளது. தற்போது வரையில் அமரன் படத்திற்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


இதை தொடர்ந்து தனது அடுத்த படமான ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமான சிவகார்த்திகேயன் மேலும் சிபிச் சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

இந்த நிலையில், சுதா கொங்கார இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் டிசம்பர் தொடங்க இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மலையாள நடிகர் நிவின்பாலி இந்த படத்தில்  இணைய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவருடன் இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement