• Oct 26 2024

சிவா மனைவியாக சாய் பல்லவி! இந்து ரெபேக்காவாக நடிக்க வாங்கிய சம்பளம்!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

நடிகை சாய் பல்லவி தற்போது நடித்துள்ள திரைப்படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் அமரன் திரைப்படம். 


இப்படம் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளிவருகிறது. இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் ராஜ் கமல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


இப்படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் தான் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.  இப்படத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவி ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. இருபின்னும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. 


Advertisement