• Apr 12 2025

‘வீர தீர சூரன்’ படம் பற்றிய புதிய அப்டேட்டை வெளியிட்ட S.J. சூர்யா..! என்ன தெரியுமா?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களை வியக்க வைத்து வரும் நடிகர் விக்கிரம், தற்போது ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 27ம் திகதி  திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றது. இந்நிலையில், நடிகர் S.J. சூர்யா சமீபத்திய பேட்டியில் இந்தப் படத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களையும் அவரது பாராட்டுக்களையும் பகிர்ந்துள்ளார்.


அதில்  S.J. சூர்யா “வீர தீர சூரன்” படத்தை பற்றி நான் பேச வேண்டிய அளவுக்கு அது ஒரு நல்ல படமாக உருவாகி இருக்கிறது என்றார். மேலும் விக்கிரம் சார் ஒரு மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாமல் அழகான கதைக்களத்துடனும் நடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தற்பொழுது இவர் கதைத்த இந்தக் கருத்துக்கள் ரசிகர்களிடையே ‘வீர தீர சூரன்’ படம் மீதான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியுள்ளது. விக்கிரம் இதுவரை நடித்த மாஸான கதாப்பாத்திரங்களை விட, ‘வீர தீர சூரன்’ படத்தில் அவர் ஒரு புதிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. 'வீர தீர சூரன்’ படம் மார்ச் 27ம் திகதி  திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இப்படத்தினைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் மட்டும்மல்லாது திரையுலகினரும் எதிர்பார்ப்பாக உள்ளனர்.

Advertisement

Advertisement