• Dec 26 2024

இனியாவுக்கு போன் பண்ணிய எஸ்.கேயின் மேனேஜர்? அமிர்தாவின் அம்மா கிளப்பிய புது பிரச்சினை

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பழனிச்சாமி தனது பிறந்தநாளுக்கு சமைத்ததற்காக பாக்கியாவுக்கு பணத்தை கொடுக்க, அவர் வாங்க மறுக்கிறார். ஆனாலும் பழனிச்சாமி கொடுக்க அன்புக்கு விலை பேசாதீங்க சார் என சொல்ல, என்ன சொன்னீங்க என மறுபடியும் கேட்டு வெக்கப்படுகிறார் பழனி.

மறுபக்கம் செல்வி இருக்கும் இடத்துக்குச் சென்ற விமல் அங்கு நைசாக அவருடைய போனை எடுத்து இனியாவின் நம்பரை நோட் பண்ணிக் கொள்கிறார். அதற்குப் பிறகு அங்கிருந்து கிளம்புகிறார்.

இதையடுத்து காரில் செல்லும் பழனிச்சாமி பாக்யா சொன்ன வார்த்தைகளை நினைத்த படி செல்ல, வீதியில் இருக்கும் சிக்னலையும் கவனிக்காமல் காரை ஒட்டிச் செல்கிறார். இதை அவதானித்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி பைன் கட்ட சொல்ல, அன்புக்கு விலை பேசாதீங்க சார் இதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது என பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.


இதை அடுத்து இனியாவுக்கு போன் போட்ட விமல், சிவகார்த்திகேயனின் மேனேஜர் பேசுவதாக முதலில் கலாய்க்கிறார். ஆனால் போலீசில்  கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவேன் என இனியா மிரட்ட எதிரே வந்து ஷாக் கொடுக்கிறார். அத்துடன் நான் சொன்ன மாதிரி உன்னுடைய போன் நம்பரையும் கண்டுபிடித்துவிட்டேன் காலேஜையும் கண்டுபிடிச்சிட்டேன் என்று பேசுகிறார்.

அதன் பின்பு அமிர்தாவின் அம்மா பாக்கியா வீட்டுக்கு வருகிறார். அங்கு ஈஸ்வரி, எழில் மற்றும் அமிர்தாவிடம் சரியாக பேசவில்லை என்பதை கவனிக்கிறார். அதன் பிறகு அமிர்தா தனது அம்மாவை கூட்டிட்டு போய் சாப்பிட வைக்கும் போது, ஏன் மாப்பிள்ளையோட பாட்டி உன்கிட்ட சரியா பேச மாட்டேங்குறாங்க  எனக் கேட்க, அமர்தா குழந்தை விஷயம் பற்றி சொல்லுகிறார்.

அதற்கு அமிர்தாவின் அம்மாவும் நானும் அதே தான் சொல்றேன் நீ ஒரு குழந்தையை பெத்துக்கோ, அப்பதான் உனக்கும் இந்த குடும்பத்துக்கு ஒரு பிடிப்பு இருக்கும் என சொல்லுகிறார். அதற்கு அமிர்தா அவர்தான் இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லுகிறார் என சொல்ல,  இந்த விஷயத்தை ஈஸ்வரியிடம் அமிர்தாவின் அம்மா சொல்லுகிறார்.

அதாவது அமிர்தாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை, ஆனால் மாப்பிள்ளை தான் இப்போதைக்கு வேணாம்னு சொல்றாரார் என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement