• May 01 2025

உயிர்மாய்க்க முயன்ற கயல் சீரியல் நடிகை..! சோகத்தில் மூழ்கிய சின்னத் திரையினர்..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை உலகில் பல வெற்றிச் சீரியல்களில் தோன்றி ரசிகர்களிடையே பரிச்சயமான நடிகை அமுதா தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம், சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது வெளியான தகவலின்படி, சாலிகிராம் பகுதியில் வசித்து வரும் 28 வயதான அமுதா, தற்போது விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரது நடிப்பு மட்டுமல்லாமல், சிரிப்பு, இயல்பான பேச்சு என்பன ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.


அமுதா கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக நெருங்கிய வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகள், இவரது மனநிலையை மிகுந்தளவு பாதித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. குடும்ப உறவுகளில் ஏற்பட்ட தகராறுகள், அவரை முற்றிலும் மன சோர்வுக்குள்ளாக்கியிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

இதன் தாக்கமாக, நேற்று வீட்டில் தனியாக இருந்த நேரத்தில், கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஹார்பிக் போன்ற தீவிரமான இரசாயன திரவத்தை அமுதா குடித்துள்ளார். இந்த செயலை அவர் தற்கொலைக்கான முயற்சியாக மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில், அவரது தோழி ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த போது அமுதா இருந்த நிலையைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக 108 அம்புலன்ஸுக்கு தகவல் அளித்து, தனியார் மருத்துவமனையொன்றுக்கு அமுதாவை அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் உடனடியாக தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அமுதா, தற்போது உயிருக்குப் போராடி வருகிறார். ‘உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. அவசர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறோம்’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலைய பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்கொலை முயற்சி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமுதாவின் கணவரிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமுதா தற்கொலைக்கு முயன்ற தகவல் டெலிவிஷன் உலகில் பரவியது மட்டுமல்லாமல், அந்தத் துறையில் உள்ள பல நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 'கயல்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் அமுதாவுடன் பணிபுரிந்தவர்களும் இத்தகவலை கேட்டு வேதனையடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement