• Jun 20 2026

மகாராஜா கல்லாப் பெட்டியில் இத்தனை கோடிகளா? ஆறு நாட்களும் அமோக வரவேற்பு தான்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் தான் மகாராஜா. இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடிகளை தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளது.

மகாராஜா படத்தை பிரபல இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்க, அவருடன் பாலிவுட் திரையுலகின் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்து இருந்தார்.

மேலும் இந்த படத்தில் நட்டி நட்ராஜ், சிங்கம்புலி, அபிராமி, மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.


இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 53 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெருமளவில் தோல்வியை தழுவிய நிலையில், மகாராஜா திரைப்படம் அவருக்கு நல்ல கம்பேக்காக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement