• Dec 27 2024

2027ல் சோபிதாவின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துடும்! பீதியை கிளப்பிய ஜோதிடர்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தள பக்கத்தில் ஹாட் டாபிக் என்றால் அது நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான். நடிகை சமந்தாவை பிரிந்து மூன்று ஆண்டு காலம் தனிமையில் வாழ்ந்து வந்த நாக சைதன்யா தற்போது இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகி உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவர்களுடைய திருமண நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், இந்த ஜோடி 2027 ஆம் ஆண்டுக்குள் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவார்கள் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் பீதியை கிளப்பி உள்ளார்.


அதாவது ஜோதிடர் வேணு சுவாமி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தைரியமாகவே பலரை கடுப்பேற்றும் வகையில் சில விஷயங்களை பேசி உள்ளார். மேலும் அவர்களின் ஜாதகத்தை கணித்து தான் சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளதாகவும் கூறும் அவர், நாக சைத்தன்யா சோபிதாவின் உறவு 2027 முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் அது ஒரு மர்மமான மூன்றாவது பெண்ணின் தொடர்பு காரணமாகத்தான் அது இடம்பெறும் எனவும் கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியது ரசிகர்கள் மத்தியிலும் சினிமா துறையினர் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அவர் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertisement

Advertisement