• Apr 26 2026

சோசியல் மீடியா அக்கவுண்ட் டெலிட் ... இன்ஸ்டால இருந்தும் திடீர் விலகல்! ப்ரியங்காவின் வைரல் ஸ்டோரி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவி ரோஜா சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் ப்ரியங்கா நல்காரி. ரோஜா சீரியலுக்கு அப்புறம் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. 

ஜீ தமிழில் சீதா ராமன் சீரியலில் நடித்து வந்த இவர், பிஸ்னஸ் மேன் ராகுல் வர்மா அவர்களை 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

இவர்களில் காதலை 2 பேர் வீட்டிலும் ஏற்றுகொள்ளவில்லை அதனால் இருவரும் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்கள். அதற்கு பிறகு தனது கணவருடன் இருப்பதற்காக சீதா ராமன் சீரியலில் இருந்து கூட இடையில் விலகிவிட்டார். 

ஆனாலும் அவரது காதல் கல்யாண வாழ்க்கை நிலைக்கவில்லை. அதிரடியாகவே கணவரை விட்டுப் பிரிந்தார். தனது கணவருடனான புகைப்படங்களை டிலீட் செய்தும் உள்ளார். அதன் பிறகு தற்போது நலன் தமயந்தி சீரியலில் நடித்து வருகிறார்.  


இந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை  டெலிட் பண்ண போறேன் என இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்துல அப்டேட் பண்ணியுள்ளார் பிரியங்கா.

அத்துடன், ஆப்டர்நூன் வரைக்கும் என்னோட அக்கௌன்ட் ஆக்டிவா இருக்கும். என்னோட பேஜஸ்ல குலோப்ரேஷன் , ப்ரோமோஷன், சாரீஸ், ஜுவல்ஸ்  எல்லாத்தையுமே நான் ரிட்டன் பண்ணிடுறேன் என சொல்லியுள்ளார்.

இவ்வாறு நெகடிவ் விஷயத்திலிருந்து தான் தள்ளி இருக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.




Advertisement

Advertisement