• Dec 26 2024

சினிமா துறையை எச்சரிக்கும் சங்கம்! மீண்டும் மீண்டும் சிக்கலில் புதிய படங்கள்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் சினிமா துறைக்கு ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது. சினிமா துறையில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வறுகின்றன. குறிப்பாக நடிகர்கள் சம்பளம் அதிகரிப்பு தயாரிப்பு செலவு அதிகரிப்பு ஆகியவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்கம் சில தீர்மானங்களை நிறைவேற்றியது.


நவம்பர் 1 முதல் புதிய படங்களை இயக்க மாட்டோம் என்றனர். நவம்பர் மாதம் பிறக்க உள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் அதை வலியுறுத்தி உள்ளனர் இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை "தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவாரத்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.

d_i_a


தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் பல குளியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக வந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது அதை முழுமையாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியுள்ளது. இவை அனைத்தும் முடுமையாக பேசி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement