• Sep 17 2026

சூரி எடுத்த திடீர் முடிவு.. அடுத்தடுத்த படங்களில் இப்படியொரு மாற்றமா?

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாகவும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் சூரி. குறிப்பாக கிராமத்து பின்னணியில் உருவாகும் கதைகளில் சூரியின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேநேரத்தில், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் அவர், தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில், சூரியிடம் செய்தியாளர் ஒருவர், “வரும் காலங்களில் உங்களை கிராமத்து ஸ்டைலில் பார்க்கலாமா? சிட்டி ஸ்டைலில் பார்க்கலாமா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சூரி, “இனிவரும் காலங்களில் கதையைப் பொறுத்து நான் நடிப்பேன். அது கிராமத்துப் படமாக இருந்தாலும் சரி, சிட்டி படமாக இருந்தாலும் சரி. நான் ஒரு நடிகன். நல்ல கதைகள் வந்தால் நடிப்பேன்...” எனத் தெரிவித்துள்ளார்.

சூரியின் இந்த பதில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட கதைக்களத்துக்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாமல், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க விரும்புவதாக அவரது பதில் வெளிப்படுத்தியுள்ளது.

கிராமத்து கதைகளில் மட்டுமல்லாமல், நகர்ப்புற பின்னணியிலும் சூரியை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால், இனிவரும் காலங்களில் சூரியின் கதைத்தேர்வுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement