• Dec 27 2024

அக்காவை அடுத்து தங்கை எடுக்கும் கிரிக்கெட் படம்.. செளந்தர்யா ரஜினி என்ன செய்ய காத்திருக்கிறாரோ?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியலால் சலாம்என்ற திரைப்படம் வெளியான நிலையில் அந்த படம் படுதோல்வி அடைந்ததாகவும் முதல் காட்சிகூட முழுமையாக திரையரங்குகள் நிரம்பவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அக்கா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அடுத்து கிரிக்கெட் படத்தை தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்னொரு கிரிக்கெட் படத்தை எடுக்க போவதாகவும் அந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று ஏற்கனவே கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் இயக்க இருக்கும் திரைப்படம் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படுகிறது.



இதற்காக சமீபத்தில் சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து  சௌந்தர்யா  அனுமதி பெற்றதாகவும் இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நாடியவாலா என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் சஜித் நாடியவாலா ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிய நிலையில் அது சௌந்தர்யா ரஜினிகாந்த் படத்திற்கான பேச்சுவார்த்தை தான் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி விட்டதாகவும் சவுரவ் கங்குலி வேடத்தில் முக்கிய நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் 10 நிமிடங்கள் மட்டுமே வரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement