• Dec 25 2024

யாழ்ப்பாணத்தில் குவிந்த தென்னிந்தியப் பிரபலங்கள்... மாஸ் காட்டிய கலா மாஸ்டர்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள்  யாழ்ப்பாணத்தை  வந்தடைந்துள்ளனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.


யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டுகுழு நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இதையடுத்து பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.


இதேவேளை இன்று இசை நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான  நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ்  நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இதோ அந்த புகைப்படங்கள்...

 

Advertisement

Advertisement