• Dec 26 2024

கண்கூசும் அளவிற்கு சித்தரிக்கப்பட்ட படுக்கையறை காட்சிகள்! பதறித் துடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்து இவர் மிகச்சிறிய வருடங்களிலேயே சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றார்.

இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரனபீர் கபூரை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ராஹா என்ற மகள் உள்ளார்.


இந்த நிலையில், நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் டீப் பேக் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அண்மையில் தான் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ ஒன்று  வைரலானது. இதன் போது திரையுலகமே ஒன்றுகூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அவரை தொடர்ந்து நடிகை கத்ரீனாவின் 'டைகர் 3' பட காட்சியை டீப் பேக் டெக்னாலஜி மூலம் தவறாக சித்தரித்து வெளியிட்டு இருந்தனர்.


இவ்வாறான நிலையில், தற்போது நடிகை ஆலியா பட்டும் குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில் அவர் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. 

இதை பார்த்த பார்வையாளர்கள் இது டீப் பேக் வீடியோ என தெரியாமல், உண்மை என நினைத்து பகிர்ந்துள்ளனர். இதன் காரணமாக தற்போது குறித்த  இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement