பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தற்போது ஒரு கதாநாயகனாக தன்னை மாற்றி கொண்ட சூரி தற்போது அநேக படங்களில் ஹீரோ ஆக நடிப்பதற்கே கமிட் ஆகி வருகின்றார்.விடுதலை திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூரி தொடர்ந்து 'கருடன்', 'கொட்டுக்காலி', மற்றும் 'விடுதலை பாகம் 2' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அநேகமான நடிகை நடிகர்கள் தமது வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வரிசையில் நடிகர் சூரி தனது குடும்பத்தாருடன் சேர்ந்து பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.இதன் போது எடுத்த வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் "குடும்பத்திற்குள் விட்டுக்கொடுங்கள் அன்புகாட்டுங்கள் !அனுசரித்துப் போங்கள் !இந்தக் குடும்பத்தில் ஒருவனாக நிற்பதே என் கொடுப்பினை ! கூடுவோம்… கொண்டாடுவோம்!இது எங்கள் வீட்டுப் பொங்கல்.. " என மிகவும் அழகான வாசகத்தினை கூறியுள்ளார்.
Listen News!