• Jul 22 2025

"புயல் ஒரு ஈட்டியைப் போல தாக்க உள்ளது" வெளியானது "தங்கலான்" ரீலீஸ் டேட் !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வரலாற்று கதைகளுக்கு உள்ள வரவேற்பு அபரிவிதமான ஒன்றாக அமைவது யாவரும் அறிந்த ஒன்றே.அதே கதைகள் தமிழ் சினிமாவின் நடிப்பின் அரக்கர்களுக்கு கிடைத்தால் அதன் வெளியீடு எப்படிபட்டதாக அமையும் என்பதை இன்னும் சில நாட்களில் "தங்கலான்" படத்தின் வெளியீட்டுடன் அனைவரும் அறிந்து கொள்வர்.

Pa Ranjith-Vikram's Thangalaan is based ...

சியான் விக்ரமின்  61 வது திரைப்படமாக வெளிவரவிருக்கும்  "தங்கலான்" படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் வெளியான படத்தின் ட்ரைலர் மேலும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளதுடன் ஒரு வார இடைவெளியில் யூ டியூப்பில் 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Thangalaan - Trailer (Tamil) | Chiyaan ...

இந்நிலையில் "தங்கலான்" படத்தின் வெளியீடு தொடர்பான உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.வருகிற ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி "தங்கலான்" படமானது வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறது. 'தங்கலான் புயல் ஒரு ஈட்டியைப் போல தாக்க உள்ளது' என பதிவின் கேப்ஷன் அமைந்திருக்கிறது. 



Advertisement

Advertisement