தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசன் STR தனது சமீபத்திய கருணைமிக்க செயலில் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக பல படங்களில் பணியாற்றிய மோகன் ராஜ் காலமானதை தொடர்ந்து, அவரது குடும்பத்தை ஆதரிக்க STR தனது தனிப்பட்ட முயற்சியாக ரூ.1,00,000 நிதியுதவியை வழங்கியுள்ளார்.
மோகன் ராஜ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக தொழிலாளராக சிறப்பாக பணியாற்றியவர். அவரது மறைவு அவரது குடும்பத்தில் பெரிய சோகத்தைக் ஏற்படுத்திய நிலையில், STR-இன் இந்த உதவி ஒரு உணர்வுபூர்வமான நெகிழ்வை உருவாக்கியுள்ளது. அவரது செயல் திரையுலகில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, STR-க்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நடிகர் STR தனது மனிதநேய மனப்பான்மையால், திரையுலகின் மற்றோர் பரிமாணத்தை வெளிக்கொணர்ந்துள்ளார்.
Listen News!