• Apr 24 2026

ஸ்டைலும் ஸ்மைலும் சும்மா கலக்குதே.! துபாயில் மாஸ் காட்டும் கார்த்தியின் லேட்டஸ் க்ளிக்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தியின் திரைப்பயணம், இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்தி வீரன்’ படத்துடன் துவங்கியது. முதல் படத்திலேயே மிகவும் கரடுமுரடான, மண்வாசனை நிறைந்த கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்த கார்த்தி, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். 

இதனைத் தொடர்ந்து கார்த்தி ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று, தன் நடிப்புத் திறனை தொடர்ந்து நிரூபித்தார்.

மேலும் விருமன், ‘பொன்னியின் செல்வன், சர்தார்,மெய்யழகன், வா வாத்தியார் ஆகிய படங்கள் வெளியாகி, முன்னணி நடிகராக கார்த்தியின் நிலையை மேலும் உறுதி செய்துள்ளன. 


தற்போது பல்வேறு இயக்குநர்களுடன் கைகோர்த்து, வெவ்வேறு கேரக்டர்களில் மாறுபட்ட நடிப்பை வழங்கி, அனைவருக்கும் பிடித்த நடிகராக கார்த்தி திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி துபாயில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தற்போது அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  

Advertisement

Advertisement