• Dec 26 2024

விஜய் டிவி பிரபலங்களுக்கு அடுத்தடுத்து அடிக்கும் அதிஷ்டம்! நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த போட்டோஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமானவர்களுள் சிறந்த கலைஞராக காணப்படுபவர் தான் மதுரை முத்து. இவர் ஒரு மேடைக் கலைஞராகவும் தொலைக்காட்சி சிறப்புரையாளரும் ஆவார். இவர் ஒரு சில தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு, காமெடி ஜங்ஷன், கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி இருந்தார். அது மட்டுமின்றி பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது முதல் மனைவி கார் விபத்தில் உயிர் இழந்துள்ளார்.  அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். ஆனாலும் அதன் பிறகு தனது 32 வது வயதில் முதல் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.


மேலும் அண்மையில் தான் இவர் சொந்தமாக வீடு ஒன்று கட்டியதாகவும் வீடியோ வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுக்கும் தெரிவித்திருந்தார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது மதுரை முத்து கார் ஒன்று வாங்கியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் அவருக்கு மென்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement