• Dec 26 2024

பெங்கல் புயல் காரணமாக திடீர் மாற்றம்... படக்குழு வெளியிட்ட அறிவிப்பு...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடித்த திரைப்படங்கள் மூலம்  மக்கள் மனதை கவர்ந்தார். தற்போது நடிகர்,, தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த்.

Siddharth's next, 'Miss You,' gets a release date - The Hindu

கடைசியாக இவர் தயாரித்து நடித்த திரைப்படம் 'சித்தா'. இது ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது.  இதையடுத்து நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது, என் ராஜசேகர் இயக்கத்தில் 'மிஸ் யூ' என்ற படத்தில் நடித்துள்ளார்.

AmuthaBharathi on X:

d_i_a

கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். கருணாகரன், பால சரவணன லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி வைரலாகின.

Dhama Dhama Lyrical | Miss You Movie | Siddharth, Ashika Ranganath |  Ghibran Vaibhoda | N.Rajasekar - YouTube

இத்திரைப்படம் வருகிற 29 ம் தேதி  திரையரங்குகளில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது ஆனால் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாகவும் பெங்கல் புயல் அபாயம் காரணமாகவும் படத்தின் வெளியீட்டை தற்போது தள்ளிவைத்துள்ளது. மேலும் 'மிஸ் யூ' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. 

Image

Advertisement

Advertisement