• Dec 26 2024

கங்குவா படத்திற்கு திடீரென அடித்த அதிஷ்டம்.. டிரெண்டிங்கில் முதலிடம்.? காரணம் என்ன?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர்தான் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியானது. இந்த படம் சூர்யாவின் கேரியரிலேயே முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இந்த படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்களால் படு தோல்வியை சந்தித்தது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் தான் கங்குவா. இந்த படத்திற்கு  சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் உலக அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகி உள்ளது.

d_i_a

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கங்குவா படத்திற்கு பெரிய அளவிலேயே பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளையும் பட குழுவினர் ஏற்பாடு செய்தார்கள். மேலும் இந்த படம் பற்றி ஆகா ஓகோ என்று பில்டப் கொடுத்தார்கள். இது ரசிகர்கள் இடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த திரைப்படம் பாகுபலி போல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதைத்தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் இந்த படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா தனது ஆவேசமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் கங்குவா திரைப்படம் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றது. மேலும் கங்குவா என்ற ஹேஸ்டேக் முதல் இடத்தை பிடித்துள்ளது. 


கங்குவா படத்திற்கு திடீரென பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருவதற்கு முக்கிய காரணம் கங்குவா திரைப்படம் எதிர்வரும் 13 ஆம் திகதி ஓடிடியில்வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாகவே ஹெச்டி பிரிண்ட் தற்போது வெளியாகிவிட்டது. 

இதனால் பலரும் இந்தப் படத்திற்கு பாசிட்டி விமர்சனங்களை கொடுத்து வருகின்றார்கள். மேலும் ட்ரோல் செய்யப்படும் அளவுக்கு கங்குவா இல்லை. குறைகள் இருந்தாலும் இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

மேலும் தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக காணப்படுகின்றது. இந்த படத்தை அவ்வளவு  ட்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement