• Jun 14 2026

முத்தழகு சீரியலில் திடீர் திருப்பம்.. முத்தழகு உயிர் தப்புவாரா? அஞ்சலின் போலிமுகம் கிழியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

இதுவரையில் முத்தழகுக்கு தனது குழந்தை மீனாட்சி தான் என்று தெரிய வருகின்றது. இந்த உண்மையை டாக்டரும் உடைத்து விடுகின்றார்.

இதை தொடர்ந்து இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில், பூமியை ஹாஸ்பிடலுக்கு வருமாறு முத்தழகு அழைக்க, அவரை பின்னால் இருந்து ரவுடிகள் கடத்திச் செல்கின்றார்கள்.

ஆனாலும் அந்த நேரத்தில் பூமி சரியாக அங்கு வந்து விட முத்தழகு அவரை கத்தி கூப்பிடுகிறார். அதன் பின்பு பூமி அந்த வண்டியைத் தொடர்ந்து பின்னால் செல்கிறார்.


அங்கு வைத்து பூமியையும் முத்தழகையும் முடிக்க ரவுடிகள் பிளேன் பண்ணுகிறார்கள். அதன்படியே பூமிக்கு கத்தியால் குத்த போக, இடையில் டாக்டர் வந்து விடுகிறார். இதனால் டாக்டர் கத்திக்குத்து வாங்குகிறார்.

இதை தொடந்து முத்தழகு தப்பிக்க முயல அங்கு வந்த கார் முத்தழகை மோதி சாய்க்கிறது. இதனால் பூமி துடிதுடித்து ஓடுகிறார். இது தான் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ.

எனவே மீனாட்சி தான் தன் குழந்தை என்று பூமி அறிந்து கொள்வாரா? முத்தழகு, டாக்டர் உயிர் பிழைப்பார்களா?என பொறுத்து இருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement